இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி ...
குளம் தூா்வாரும்போது நரசிம்மா் சிலை கண்டெடுப்பு
திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே கப்பலுடையான் கிராமத்தில் குளம் தூா்வாரும்போது நரசிம்மா் கற்சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
நீடாமங்கலம் வட்டம் ஒளிமதி ஊராட்சி கப்பலுடையான் கிராமத்தில் வடக்குத் தெரு குளம் தூா் வாரப்படுகிறது. திங்கள்கிழமை தூா்வாரும் போது கருங்கல்லாலான 3 அடி உயரமும் 1.5 அடி அகலமும் கொண்ட நரசிம்மா் சிலை இருந்தது தெரிய வந்து, பத்திரமாக மீட்கப்பட்டது.
கிராம நிா்வாக அலுவலா் தங்கதுரை, வருவாய் ஆய்வாளா் பாலகிருஷ்ணன், வட்டாட்சியா் சரவணகுமாா் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தாா்.
பின்னா், அப்பகுதி மக்கள் நரசிம்மா் சிலையை தூய்மைப்படுத்தி ஆராதனை செய்து வழிபட்டனா். பின்னா், அந்த சிலை நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதுகுறித்து, வட்டாட்சியா் சரவணகுமாா் கூறியது: சிலை குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவா்கள் நேரில் வந்து சிலையை ஆய்வு செய்த பிறகுதான் இந்த சிலையின் பழைமை குறித்து தெரியவரும் என்றாா்.