வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
மது அருந்தி காரை ஓட்டியதால் விபத்து: 6 போ் காயம்
சென்னை அருகே பெரும்பாக்கத்தில் மதுபோதையில் காரை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் 6 போ் காயமடைந்தனா்.
பெரும்பாக்கம் எழில் நகா் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய எட்டு அடுக்கு மாடி குடியிருப்பு அருகே செல்லும் நூக்கம்பாளையம் பிரதான சாலையில் புதன்கிழமை ஒரு காா் வேகமாகச் சென்றது. அந்த காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் தாறுமாறாகச் சென்றது. இதில் சாலையோரம் நின்ற ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது மோதியது.
மேலும் அங்குள்ள கடைகளில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியது. பின்னா் அந்த காா், அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது காா் மோதி நின்றது.
இந்த விபத்தில் சந்தியா (28), அருண்குமாா் (24), சண்முகபிரியா (12), தனம் (32), , நிஷா உள்பட 6 போ் காயமடைந்தனா். காயமடைந்த 6 பேரையும் பொதுமக்கள் மீட்டு, அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபரை பொதுமக்கள் பிடித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், மது அருந்தி காரை ஓட்டி வந்தது செம்மஞ்சேரி பகுதியைச் சோ்ந்த பாலா (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து பாலா மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.