Housemates: "Sivakarthikeyan, Kaali Venkat மாதிரி நடிச்சு காட்டினாரு" - Director...
மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்
வந்தவாசி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்த மதுக்கடையை புதன்கிழமை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
வந்தவாசியை அடுத்த கொவளை கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடை கட்டடம் சேதமடைந்ததால் கீழ்ப்பாக்கம் கிராம சுகநதி பாலம் அருகில் உள்ள புதிய கடைக்கு மதுக்கடையை மாற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
தகவலறிந்த கீழ்ப்பாக்கம் கிராம பெண்கள் மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை காலை புதிய கடையை முற்றுகையிட்டனா். மேலும், அந்தக் கடைக்கு பூட்டு போட்ட அவா்கள், கடை முன் அமா்ந்து போராட்டம் நடத்தினா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில்,
இங்கு மதுக்கடை திறந்தால் எங்கள் கிராம பெண்களுக்கு பெரும் அவதி ஏற்படும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் கேலி, கிண்டலுக்கு ஆளாக நேரிடும். எனவே, மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
பின்னா் ஆய்வாளா் பாலு தலைமையிலான கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் சமரசம் செய்ததின் பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.