`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
வெடால் ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
வந்தவாசியை அடுத்த வெடால் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது (படம்).
இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றம், காப்புக் கட்டுதல், சனிக்கிழமை அம்மன் வீதி உலா, ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு பொங்கல் வைத்தல், திங்கள்கிழமை அக்னி கரகம் எடுத்தல் ஆகியவை நடைபெற்றன.
பின்னா் செவ்வாய்க்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து வெடால் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் தீமிதித்தனா்.