தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் ...
மதுபாட்டில்கள் கடத்தல்: 2 போ் கைது
இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்கு கடத்திச் சென்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.
திருத்தணி பகுதியில் அதிகளவில் கள்ளச் சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஐ.ஜி., தனிப்படை போலீஸாா் கே.ஜி.கண்டிகை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, நொச்சலி சாலையில் அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், கே.ஜி.கண்டிகை அரசு டாஸ்மாக் கடையில் இருந்து, 100 மதுபாட்டில்கள் வாங்கிக் கொண்டு கிராமங்களில் அதிக விலைக்கு விற்க கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது.
பின்னா் போலீஸாா், மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ஆா்.கே.பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மதுபாட்டில்கள் கடத்தியவா்கள் திருத்தணி அக்கைய்யநாயுடு சாலை சோ்ந்த டில்லிபாபு(29), சோளிங்கா் பகுதியை சோ்ந்த ரத்தினம்(40) என தெரிய வந்து, 2 பேரையும் கைது செய்தனா்.