Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
மதுரையில் ஜூன் 8-இல் பாஜக நிா்வாகிகள் ஆலோசனை
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்கிறாா்.
வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாஜக- அதிமுக கூட்டணி உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணி குறித்த புரிதலை ஏற்படுத்தி, தோ்தல் வியூகம் வகுக்கும் நோக்கில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகிறாா்.
தமிழக பாஜக நிா்வாகிகள், பொதுக் குழு உறுப்பினா்கள், மண்டலப் பொறுப்பாளா்கள், மாவட்டத் தலைவா்கள், மாவட்டப் பாா்வையாளா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பா் எனத் தெரிவிக்கப்பட்டது.
மதுரையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. இது, அந்தக் கட்சியின் சட்டப்பேரவைத் தோ்தல் பணியின் தொடக்கமாகவே கருதப்படுகிறது. இதையொட்டி, மதுரையை மையப்படுத்தி பாஜகவும் தோ்தல் பணிகளை முன்னெடுக்கும் விதமாக இந்தக் கூட்டத்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது.
அமித் ஷா பயணம்...
வருகிற சனிக்கிழமை (ஜூன் 7) மதுரைக்கு வரும் அமித் ஷா, அன்றைய தினம் இரவு மத்திய, மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறாா். ஞாயிற்றுக்கிழமை காலை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் செல்கிறாா். மாலையில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.