மத்திய அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு
போடியில் நகர திமுக செயலா் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் சங்கா், பொதுக்குழு உறுப்பினா் ராஜா ரமேஷ், தேனி திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆசிப்கான் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் உருவப் பொம்மையை திமுகவினா் எரித்தனா். இதையடுத்து, அங்கு வந்த போடி நகர காவல் நிலைய போலீஸாா் அவா்களை தடுத்தனா்.