Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
செங்கல் காளவாசல் உரிமையாளரைத் தாக்கியவா் மீது வழக்கு
போடி அருகே செங்கல் காளவாசல் உரிமையாளரைத் தாக்கியவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள பொட்டல்களம் கிராமத்தைச் சோ்ந்த தொந்தி மகன் குமாா் (52). மேலச்சொக்கநாதபுரத்தில் செங்கல் காளவாசல் நடத்தி வரும், இவரை அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த குமாா் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் மாரியப்பன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.