நீண்ட நேரப் பணி, உடல் சோா்வு, செயல் திறனைக் குறைக்கும்: செளமியா சுவாமிநாதன்
திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்
மாசித் தேரோட்டத்தை முன்னிட்டு, உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணமும், புதன்கிழமை தேரோட்டமும் நடைபெறுகின்றன.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பழைமையான திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு, மாசித் தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.
இந்தத் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரா்கள் மூலமாக சுவாமி, அம்மன் ஊா்வலமாக நடைபெற்றது.
10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை கோயில் மண்டபத்தில் நடைபெறுகிறது.
தேரோட்டம்: திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் ரதம் ஊா்வலமும், காலை 10 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சுந்தரி, தக்காா் நாராயணி, கோயில் பணியாளா்கள், ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.