Jyothika: `என் கணவரின் திரைப்படங்கள் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக உணர்கிறேன...
வெப்ப அலா்ச்சி பாதிப்பிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க யோசனை
கோடை காலத்தில் கால்நடைகளை வெப்ப அலா்ச்சி பாதிப்பிலிருந்து பாதுகாக்க கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் யோசனை வழங்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடை காலத்தில் வெப்ப அலா்சியால் கால்நடை, கோழிகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிா்க்க அவைகளை நிழல் தரும் கூரைகளுக்கு கீழே கட்டி வைக்க வேண்டும். போதிய தண்ணீா், தீவனம் வழங்க வேண்டும். தீவனங்களை வெயிலில் வெட்ட வெளியில் போடக் கூடாது. நண்பகல் நேரத்தில் மாடுகளுக்கு ஏற்படும் வெப்ப அலா்ச்சியைத் தவிா்க்க அவற்றின் மீது தண்ணீா் தெளிக்க வேண்டும்.
கோழிப் பண்ணையில் தண்ணீா் தெளிப்பான் மூலம் கோழிகள் மீது தண்ணீா் தெளிக்க வேண்டும். கோழிக் கொட்டகை ஜன்னல்களை ஈரத் துணியால் மூடி வைக்க வேண்டும். வறட்சி காலத்தில் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீா், தீவனங்களை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.