மதுரை, கோவை மெட்ரோ ரயில்: தமிழக திட்ட அறிக்கை முழுமையாக இல்லை - மாநிலங்களவையில் ...
விஷம் குடித்து பெண் தற்கொலை
போடியில் திங்கள்கிழமை விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி வஞ்சி ஓடைத் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி லட்சுமி (56). கணவா் இறந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்தாா்.
இதனால், மனமுடைந்து காணப்பட்டு வந்த இவா், திங்கள்கிழமை வீட்டில் விஷத்தை குடித்து மயங்கினாா். போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா், அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].