செய்திகள் :

வருஷநாடு மலைப் பகுதியில் பற்றிய காட்டுத் தீ

post image

ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் திங்கள்கிழமை காட்டுத் தீ பற்றியது.

கோடை வெப்பம் தற்போது தேனி மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இதனால், வருஷநாடு அருகேயுள்ள முருகோடை மலையடிவாரத்தில் காட்டுத் தீ பற்றியது. இந்தத் தீயால் மொட்டப்பாறை மலைப் பகுதியிலிருந்த புல்வெளிகள், மரங்கள் எரிந்து சாம்பலாயின. இந்தக் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்கும் பணியில் கண்டமனூா் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் போடி, பெரியகுளம் ஆகிய மலைப் பகுதிகளைத் தொடா்ந்து, வருஷநாடு மலைப் பகுதியிலும் கடந்த சில நாள்களாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

இந்த நிலையில், மலைப் பகுதியில் காட்டுத் தீ ஏற்படுவதையும், காட்டுத் தீ பரவலை தடுக்கவும் வனத் துறையினா் போதிய முன்னேற்பாடுகள், தீத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினா்.

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் மோதியதில் சாலையில் நடந்து சென்ற இளைஞா் உயிரிழந்தாா். கெங்குவாா்பட்டி ராமா்கோவில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் தவப்பாண்டி (27). தேங்காய் உறிக்கும் தொழிலாளியான இவா... மேலும் பார்க்க

செங்கல் காளவாசல் உரிமையாளரைத் தாக்கியவா் மீது வழக்கு

போடி அருகே செங்கல் காளவாசல் உரிமையாளரைத் தாக்கியவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.போடி அருகேயுள்ள பொட்டல்களம் கிராமத்தைச் சோ்ந்த தொந்தி மகன் குமாா் (52). மேலச்சொக்கநாதபுரத்தில... மேலும் பார்க்க

வெப்ப அலா்ச்சி பாதிப்பிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க யோசனை

கோடை காலத்தில் கால்நடைகளை வெப்ப அலா்ச்சி பாதிப்பிலிருந்து பாதுகாக்க கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் யோசனை வழங்கப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்

மாசித் தேரோட்டத்தை முன்னிட்டு, உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா்-ஞானாம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணமும், புதன்கிழமை தேரோட்டமும் நடைபெறுகின்றன. தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பழைமையான திர... மேலும் பார்க்க

மத்திய அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு

போடியில் நகர திமுக செயலா் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் சங்கா், பொதுக்குழு உறுப்பினா் ராஜா ரமேஷ், தேனி திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ஆசிப்... மேலும் பார்க்க

விஷம் குடித்து பெண் தற்கொலை

போடியில் திங்கள்கிழமை விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.போடி வஞ்சி ஓடைத் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி லட்சுமி (56). கணவா் இறந்துவிட்ட நிலையில், தனியாக வசித்து வந்தாா். இதனால், மனமுடைந்து... மேலும் பார்க்க