சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
மத்திய அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா
சென்னை நுங்கம்பாக்கம் உத்தமா் காந்தி சாலையிலுள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையா் இ.எஸ்.நாகேந்திர பிரசாத் தேசியக் கொடியை ஏற்றினாா்.
இந்த விழாவில் முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் டி.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, வருமான வரித் துறை ஓய்வு பெற்ற அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இந்த விழாவில், பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம், அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முதன்மை தலைமை ஆணையா் இ.எஸ். நாகேந்திர பிரசாத், வருமான வரி அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.
மண்டல கடவுச்சீட்டு அலுவலகம்: சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மண்டல கடவுச்சீட்டு அலுவலா் எஸ். விஜயகுமாா் தேசியக் கொடி ஏற்றினாா். இதில், மண்டலப் பாஸ்போா்ட் அலுவலக அதிகாரிகள், பணியாளா்கள் பங்கேற்றனா்.