செய்திகள் :

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்! 8-வது ஊதியக் குழுவில் உயரும் சம்பளம்!

post image

மத்திய அரசு அமல்படுத்தவுள்ள 8-வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களுக்கு கணிசமான அளவில் சம்பளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக நமது நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. அந்த வகையில் நாட்டின் முதல் ஊதியக்குழு 1946 ஆம் ஆண்டிலும், தற்போதுள்ள 7-வது ஊதியக் குழு கடந்த 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பதவிக் காலம் வரும் 2026-இல் முடிவடைய உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியா்களின் ஊதியம், ஓய்வூதியதாரா்களுக்கான படிகளை மாற்றியமைப்பதற்காக 8-வது ஊதியக் குழு அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

2026-2027 ஆம் ஆண்டுக்கான 8-வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களில் சம்பளம் மாதத்திற்கு ரூ.14,000 முதல் ரூ.19,000 வரை உயரும் எனத் தெரியவந்திருப்பது ஊழியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு வேலை நிரந்தரம் என்பதே முக்கிய காரணமாக இருந்தாலும், அந்தப் பணியில் இருக்கும் சலுகைகளும் அதிகமாகவே இருக்கின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு முறை மாற்றப்படும் ஊதியக் குழுவில் அடுத்தாண்டு மாற்றியமைக்கப்படும் ஊதியக் குழுவால் மத்திய அரசு ஊழியர் அதிகரிக்கும் சம்பள உயர்வு அரசு ஊழியர்கள் மத்தியில் தற்போது மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

8-வது ஊதியக் குழுவில் ஒருவருக்கு சராசரியாக 14-19 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு இருக்கும் என்று கணக்கு வைத்துக் கொண்டால், சுமார் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கிவரும் ஊழியருக்கு மாதத்திற்கு ரூ.14,000 முதல் ரூ.19,000 வரை அதிகமாக ஊதியம் கிடைக்கும்.

2026 - 2027 ஆம் ஆண்டுக்கான ஊதியக் குழு வருகிற ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்படும் என்றும், இது அடுத்தாண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்தத் தனியார் நிதிச் சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள சாத்தியக் கூறுகளின் படி மூன்று விதமாக ஊதிய உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

எவ்வளவு உயரும்?

8-வது ஊதியக் குழுவிற்கு ரூ.1.75 லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்தால், ஊழியர்களுக்கு 50-50 சதவிகிதம் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் உயரும். இதனால், மாதச் சம்பளம் ரூ.14,600 வரை உயரும். ஒருவேளை மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தால், மாதச் சம்பளம் ரூ.16,700 வரை உயரும். அப்படி இல்லாமல் மத்திய அரசு ரூ.2.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தால், மாதச் சம்பளம் ரூ.18,800 வரை உயரும் என்றும் அந்த தனியார் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களில் சம்பளம் சராசரியாக ரூ.1 லட்சமாக இருக்கிறது. இந்த ஊதிய உயர்வின் மூலம் 50 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் 7-வது ஊதியக்குழுவிற்கு ரூ.1.02 லட்சம் கோடி செலவிடப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2.57 மடங்கு ஊதிய உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான 2.57 மடங்கு ஊதிய உயர்வு இருந்தால் அவர்களில் சம்பளம் 157 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவர் தற்போது ரூ.18,000 சம்பளம் வாங்கி வந்தால், அவருக்கு ரூ.46,260 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் சம்பளமாக ரூ.9,000 வாங்கி வந்தால் அவருக்கு ரூ.23,130 வரை கிடைக்கும். ஒருவேளை 1.92 மடங்கு ஊதிய உயர்வு இருந்தால், ரூ.18000 லிருந்து ரூ.34,560 ஆக உயரும். இது 92 சதவிகித ஊதிய உயர்வாகும்.

7-வது ஊதியக்குழுவின் போது அனைவருக்கும் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இது 157 சதவிகிதம் அதிகமாகும். இதனால், குறைந்தபட்சம் ஊதியம் ரூ. 7,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: முதலீட்டில் செயல் நுண்ணறிவு: இளம் தலைமுறையினர் அபாரம்!

ஸ்மார்ட்போன்களில் நேரம் செலவிடும் இந்தியர்களால் வருவாய் அதிகரிப்பு!

இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை வளர்ச்சியடைவதாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் எர்ன்ஸ் & யங்கின் ஆய்வில் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு த... மேலும் பார்க்க

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 7 பேர் காயம்

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் பெங்களூரு-காமாக்யா எக்ஸ்பிரஸ் ... மேலும் பார்க்க

தாணேவில் தடை செய்யப்பட்ட 238 இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல்

தாணேயில் தடை செய்யப்பட்ட 238 கோடீன் இருமல் சிரப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தின் ஷில் டைகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனத்தில் 22 வயது நபரைப் பி... மேலும் பார்க்க

புவனேஸ்வரில் பல்கலை. விடுதியில் முதுகலை மாணவர் சடலம் மீட்பு

புவனேஸ்வரில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து முதுகலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக விடுதி வளாகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை காலை முதுகலை மாணவரி... மேலும் பார்க்க

பெங்களூரு ஏசி விரைவு ரயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!

பெங்களூரு ஏசி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அஸ்சாம் செல்லும் இந்த ரயில், ஒடிஸாவில் கட்டாக் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது ரயிலின் 11 பெட்... மேலும் பார்க்க

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்ட... மேலும் பார்க்க