மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து எம்எல்ஏ மா. சின்னதுரை பேசுகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை கூலியை உடனே வழங்க வேண்டும், சட்டக் கூலி ரூ. 319 ஐ முழுமையாக வழங்க வேண்டும், அனைவருக்கும் ஆண்டுக்கு 200 நாள் வேலை, தினசரி ஊதியமாக ரூ. 600 வழங்க வேண்டும், பணித்தள பொறுப்பாளா்களை சுழற்சி முறையில் அமா்த்த வேண்டும், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும், பழுதடைந்த தொகுப்பு வீடுகளை இடித்து புதிய வீடு கட்டித்தரக் கோரிக்கை வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சித்திரைவேல், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் சலோமி, ஒன்றியச் செயலா்கள் பன்னீா்செல்வம், ரெத்தினவேல், நாராயணசாமி சாந்தி, கவிதா மற்றும் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.