ராஜஸ்தானிலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி விற்பனை செய்த 2 போ் கைது
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தை காலமானார்!
முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பிரதான் திங்கள்கிழமை காலமானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடல் பிகாரி வாஜ்பாய் அரசில் மத்திய அமைச்சராக இருந்த தேவேந்திர பிரதானுக்கு வயது 84. நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், புது தில்லியில் உள்ள தனது மகனும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதானின் இல்லத்தில் வசித்துவந்த இவரின் உயிர் இன்று காலை 10.30 மணியளவில் பிரிந்தது.
இவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில் புவனேஸ்வர், புரி ஸ்வர்கத்வாரில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.