ஓய்வுபெறும் நாளில் ஊழியர்கள் இடைநீக்கம் இல்லை: தமிழ்நாடு அரசு
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
அரூா் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பேதாதம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தா் (38), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சந்தியா (30). தம்பதிக்கு 2 மகன், மகள் உள்ளனா். மனைவி மீதான சந்தேகம் காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுந்தா், அரிவாளால் சந்தியாவின் கழுத்து, கால்களை வெட்டினாா். தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தியா அளித்த புகாரின்பேரில் கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சுந்தரை கைது செய்தனா்.