5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு... யாருடையது தெரியு...
மனைவியை செல்போனில் அழைத்து முத்தலாக் கூறிய நபர் கைது!
கேரளத்தில் மனைவியை செல்போன் மூலம் அழைத்து மும்முறை தலாக் கூறி விவாகரத்து அறிவித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்லம் மாவட்டத்தின் மைனகப்பள்ளியைச் சேர்ந்தவர் அப்துல் பாசித் இவர் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து சவாரா பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை, 2 வது திருமணம் செய்துள்ளார். அவரது முதல் மனைவி பாசித்தின் குடும்ப வீட்டில் வசித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்த இளம்பெண்ணை வாடகை வீட்டில் தங்கவைத்துள்ளார்.
இந்நிலையில், தனது கணவருக்கு ஏற்கனவே திருமணமானதைப் பற்றி அறிந்த அந்த இளம்பெண் அதைப் பற்றி அவரிடம் கேட்டுள்ளார். இதனால், கோவமடைந்த பாசித் அந்த பெண்ணை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், பாசித் மற்றொரு திருமணம் கூட செய்வேன் என அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.
இதையும் படிக்க: ராணுவ முகாமின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! தேடுதல் வேட்டை தீவிரம்!
இதனைத் தொடர்ந்து, அந்த பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது, கடந்த ஜன.19 அன்று அந்த இளம் பெண்ணை செல்போனில் அழைத்த பாசித் மும்முறை தலாக் கூறி தங்களது உறவு விவாகரத்து ஆகிவிட்டதாகக் கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பாசித் மீது இஸ்லாமிய பெண்கள் சட்டம் உள்பட பிற குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். பின்னர், அவர் தற்போது 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சாவரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.