இந்த வார ராசிபலன் மார்ச் 18 முதல் மார்ச் 23 வரை #VikatanPhotoCards
மம்மூட்டிக்கு புற்றுநோயா? செய்தி தொடர்பாளர் விளக்கம்!
நடிகர் மம்மூட்டியின் உடல்நலம் குறித்து வெளியான தகவல்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வெளியான டோமினிக் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஓரளவு வணிக வெற்றியைப் பெற்றது.
அடுத்ததாக, மம்மூட்டி நடித்து முடித்த ‘பசூகா’ திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான, புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: சூர்யா - 45 இசைப்பணி துவக்கம்!
தற்போது, மம்மூட்டி இயக்குநர் மகேஷ் நாராயணன் படத்தில் மோகன்லால், குஞ்சக்கோ போபன் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதற்கிடையே, கடந்த சில நாள்களாக மம்மூட்டி படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருக்கிறார். திடீரென ஏன் ஓய்வு எடுக்கச் சென்றார் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்ததும் மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதால்தான் அவரால் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை என தகவல்கள் பரவியதால் மம்மூட்டி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், மம்மூட்டி தரப்பிலிருந்து அவரின் செய்தி தொடர்பாளர் புதிய விளக்கமளித்துள்ளார். அதில், ”மம்மூட்டி ஆரோக்கியமான உடல்நலத்துடன் இருக்கிறார். ரம்ஜானுக்காக அவர் நோன்பு இருப்பதால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவருக்கு புற்றுநோய் எனப் பரவும் வதந்திகள் பொய்யானவை. விரைவில், அவர் மகேஷ் நாராயணன் படப்பிடிப்பில் இணைவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.