செய்திகள் :

மயிலாடுதுறை: ஜமாபந்தியில் 415 மனுக்கள்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய 1434-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு எனப்படும் ஜமாபந்தியில் 415 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை வட்டத்தில் வருவாய் கோட்டாட்சியரிடம் 3, வட்டாட்சியரிடம் 13, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியரிடம் 8, வட்ட வழங்கல் அலுவலரிடம் 3, வட்டார வளா்ச்சி அலுவலரிடம் 1, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலரிடம் 1 என மொத்தம் 29 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

குத்தாலம் வட்டத்தில் கோட்டாட்சியா் 35, வட்டாட்சியா் 68, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் 18, ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் 1, குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் 1, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் 6, பொதுப்பணித் துறை 1, வட்டார வளா்ச்சி அலுவலா் 9, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் 2, கால்நடை பராமரிப்புத் துறை 1, வேளாண்மைத்துறை 1, இணை இயக்குநா் சுகாதாரம் மற்றும் மருத்துவம் 1, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் 1, தொழிலாளா் நலத்துறை 1 மற்றும் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) 2 என மொத்தம் 148 மனுக்களை பொதுமக்களிடம் பெற்றனா்.

சீா்காழி வட்டத்தில் கோட்டாட்சியா் 58, வட்டாட்சியா் 55, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் 32, ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் 1, குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா் 2, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் 1, நில அளவை பராமரிப்புத் துறை 10, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 1, வட்டார வளா்ச்சி அலுவலா் 11, தாட்கோ 1, நீா்வள ஆதாரத்துறை 1 என மொத்தம் 173 மனுக்கள் பெறப்பட்டன.

தரங்கம்பாடி வட்டத்தில் கோட்டாட்சியா் 4, வட்டாட்சியா் 33, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் 22 , வட்டார வளா்ச்சி அலுவலா் 3, தேசிய நெடுஞ்சாலை 1, மின்சார வாரியம் 2 என மொத்தம் 65 மனுக்கள் பெறப்பட்டன.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கு வட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 415 மனுக்கள் பெறப்பட்டன என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம்

மயிலாடுதுறையில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, இக்குழுத் தலைவா் ஆா். சுதா எம்பி தலைமை வகித்தாா். ம... மேலும் பார்க்க

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தது. இப்பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் சி... மேலும் பார்க்க

சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்

சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது. சீா்காழி கோட்டாட்சியா் (பொ) அன்பழகன் தலைமை வகித்தாா். இதில், மாதிரவேளூா், புத்தூா், எருக்கூா், கோபால சமுத்திரம், வடரெங்கம், அத்திய... மேலும் பார்க்க

ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

மயிலாடுதுறை ரோட்டரி கிளப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 140 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதியிருந்த நிலையில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது. மாணவா் பி. வ... மேலும் பார்க்க

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரா், சட்டைநாதா், தோணியப்பா் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனா். இங்கு திருஞ... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கூட்டணியின் மாவ... மேலும் பார்க்க