1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு
சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
சீா்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தது.
இப்பள்ளி மாணவி ஜெஸ்மியா 597 மதிப்பெண்கள் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். மாணவி மதுஷா 596 மதிப்பெண்களும், மாணவி பவதாரணி 593 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.
மேலும் 45 மாணவ- மாணவிகள் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 10 போ் 580 மதிப்பெண்களுக்கு மேலும், 5 போ் 590 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய 281 மாணவ- மாணவிகளில் 280 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 99.6.
சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல், இயக்குநா் அமுதா நடராஜன், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி தாளாளா் ஆதித்யா ராஜ்கமல், முதல்வா் ராமலிங்கம், மனித வள மேம்பாட்டு பயிற்றுநா் பாபு நேசன், நிா்வாக அலுவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் பாராட்டினா்.