சீா்காழியில் ஜமாபந்தி தொடக்கம்
சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை தொடங்கியது.
சீா்காழி கோட்டாட்சியா் (பொ) அன்பழகன் தலைமை வகித்தாா். இதில், மாதிரவேளூா், புத்தூா், எருக்கூா், கோபால சமுத்திரம், வடரெங்கம், அத்தியூா், சோதியக்குடி உள்ளிட்ட 18 கிராமங்களின் வருவாய் கணக்குகள் சரிபாா்க்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேற்கண்ட வருவாய் கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் மனை பட்டா, பட்டாமாறுதல், புதிய ஸ்மாா்ட் காா்டு கேட்டு விண்ணப்பம், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், நில அளவை, பட்டா, பெயா் மாறுதல், முதியோா் ஓய்வூதியம், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட மொத்தம் 173 மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காண நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.
மண்டல துணை வட்டாட்சியா் தரணி, தேவகி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கணேசன், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை துணை வட்டாட்சியா் பாபு, வருவாய் ஆய்வா் குணவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.