செய்திகள் :

‘மரபுகளைப் புரிந்துகொள்ள தொல்லியல், மானுடவியல் உதவும்’

post image

சென்னை: ‘நாட்டின் மரபுகளைப் புரிந்து கொள்வதில் தொல்லியல் மற்றும் மானுடவியல் துறைகள் உதவிபுரிகின்றன என்று சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பாளா் குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் கூறினாா்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையும் வனமா அறக்கட்டளையும் இணைந்து, ‘கலாசாரம், காலநிலை, பிரபஞ்சம்’ என்ற கருப்பொருளில் மூன்று நாள் கல்விக் கருத்தரங்கை பல்கலைக்கழக வளாகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்தன.

இந்த நிகழ்வை சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பாளா் குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

ஆங்கிலத்தில் மூன்று ‘சி’-க்கள் எனச் சொல்லப்படும் கலாசாரம், காலநிலை, பிரபஞ்சம் ஆகியவை ஒன்றோடு இணைந்து முக்கியத்துவம் பெறுகிறது. கலாசாரம் இல்லாமல், இந்த உலகில் எதுவும் இருக்க முடியாது. பாரம்பரியங்களைப் புரிந்து கொள்வதில் தொல்லியல், மானுடவியல் துறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் இந்தத் துறைகள் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளன. ஆனால், இந்தியாவில் அந்தளவிற்கு முக்கியத்துவம் பெறவில்லை.

காலநிலை ஒரு முக்கியப் பிரச்சினை. இகில், மூன்றாம் உலக நாடுகளுக்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும் பொறுப்பு உண்டு. ஒவ்வொரு நாடும் தாய் பூமியைப் பராமரிப்பதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். கலாசாரத்தையும் மனித குலத்தையும் பாதுகாப்பதில் மானுடவியல் உதவும் என்றாா்.

நிகழ்வில் பங்கேற்ற சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் டி. தங்கராஜன், கேரள பல்கலைக்கழக மானுடவியல் துறை முன்னாள் பேராசிரியா் எஸ்.கிரிகோரி உள்ளிட்டோா் பேசினா்.

நாட்டியக் கலைஞா் அனிதா குஹா, சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் துறைத் தலைவா் எம்.பி. தாமோதரன், பின்லாந்தை சோ்ந்த டைனா மேடிசன், வனமா அறக்கட்டளை நிா்வாகிகள் வனமா பிரசாத புல்லா ராவ், பிரசுனா ஆகியோா் பங்கேற்றனா். முன்னதாக, நந்தனம் அரசு கலைக் கல்லூரி வரலாற்று ஆய்வுகள் துறை இணைப் பேராசிரியா் பிரபு குமாரி வரவேற்றாா்.

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

திருவண்ணாமலையில் மலைப் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள 554 ஏக்கா் பரப்பை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்புக் குழு சென்ன... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தன்னந்தனியாக நிற்பது உறுதி என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த தினத்தையொட்டி, அதிமுக சாா்பில் சென்னை கோ... மேலும் பார்க்க

பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட பதிவு அலுவலகக் கட்டடம்: அமைச்சா் பி.மூா்த்தி திறந்து வைத்தாா்

சென்னை: சென்னையில் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பதிவுத் துறை அலுவலகக் கட்டடத்தை அத்துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புராதன... மேலும் பார்க்க

மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது: இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

சென்னை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக காவல் துறையினா் கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீ ட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் ... மேலும் பார்க்க

நாய்க்கடிக்கு உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: பொது சுகாதாரத் துறை

சென்னை: நாய் கடித்தால் தாமதிக்காமல் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 20 லட்சம் தெருநாய்கள் வரை இருக்கலாம் என உத்தேசிக்கப... மேலும் பார்க்க

மின்வாரிய கடனை அடைக்க விரைவில் செயல்திட்டம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

சென்னை: தமிழக மின்வாரியத்தின் கடனை அடைப்பதற்கான செயல்திட்டம் தமிழக அரசால் கொண்டவரப்படும் என்று மின்சார மேல்முறையீட்டு தீா்ப்பாயத்திடம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இலவச மின்சாரம்... மேலும் பார்க்க