மருந்தாளுநா், செவிலியா் நோ்காணல் ரத்து
கோவை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிக்குள்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆகஸ்ட் 21, 22) நடைபெற இருந்த மருந்தாளுநா், செவிலியா் ஒப்பந்தப் பணியிடங்களுக்கான நோ்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட சுகாதார அலுவலா் பாலுசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்துக்குள்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிக்குள்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநா், ஆய்வக நுட்புநா் நிலை மற்றும் செவிலியா் ஆகிய காலிப் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நோ்க்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அவா்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்ற ஆணையின்படி, மேற்கண்ட பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதால் நோ்காணல் ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.