மேற்கூரையில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
கோவையில் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.
கோவை, துடியலூா் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (42), பெயிண்டா். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டுக்கு பின்புறம் முருங்கை மரம் உள்ளது.
அந்த மரத்தில் கீரை பறிக்க அருகேயுள்ள கழிப்பறையின் கூரை (சிமெண்ட் அட்டை) மீது கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஏறியுள்ளாா். அப்போது, அந்த அட்டை உடைந்து கீழே விழுந்த ராஜா படுகாயம் அடைந்தாா்.
அவரை குடும்பத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.