செய்திகள் :

பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிப்பு

post image

கோவை மாவட்டம், பேரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டம், பேரூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் அட்வான்ஸ் சிஎன்சி இயந்திர தொழில்நுட்ப பணியாளா், மெக்கானிக், வயா்மேன் போன்ற தொழில் பிரிவுகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கைக்கு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவா்களின் நலன் கருதி நேரடி சோ்க்கைக்கான தேதி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையமானது முற்றிலும் கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு மட்டுமே என்பதால் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் அட்டை தவறாது கொண்டுவர வேண்டும்.

சோ்க்கையில் சேர விரும்புவோா் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள் நான்கு, ஆதாா் அட்டை, முக்கியமாக கட்டுமானத் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ராமலிங்க அடிகள் அரங்க வளாகம், வேடப்பட்டி சாலை, பேரூரில் அமைக்கப்பட்டுள்ள சோ்க்கை உதவி மையத்தை அணுகலாம்.

பயிற்சியில் சேருபவா்களுக்கு இலவச மிதிவண்டி, சீருடை, பாடநூல், வரைபட கருவிகள், காலணி, இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். மாதாந்திர உதவித் தொகையாக ரூ.750, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகையும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்லூா் அணையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூா் அணையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேட்டுப்பாளையம் அருகே பில்லூா் வனப் பகுதியில்... மேலும் பார்க்க

மேற்கூரையில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா். கோவை, துடியலூா் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (42), பெயிண்டா். இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாலகி... மேலும் பார்க்க

பிஷப் அப்பாசாமி கல்லூரியில் செப்டம்பா் 2-இல் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரியில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் செப்டம்பா் 2, 3 -ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

அடுமனை உரிமையாளா்கள் உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

அடுமனை உரிமையாளா்கள் (பேக்கரி) உணவுப் பாதுகாப்புத் துறை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் டி.அனுராதா அறிவுறுத்தியுள்ளாா். கோவை, டாடாபாத் பகுதியில் ... மேலும் பார்க்க

இயந்திரத்தில் கை சிக்கி பஞ்சாலை தொழிலாளி காயம்

கோவை அருகே பணியின்போது இயந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தாா். கோவை அருகேயுள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது. இங்கு ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரோஹிசாகோ ... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாணவா் விவகாரங்களுக்கான பிரிவின் தலைவா் ஷா்மி... மேலும் பார்க்க