5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு... யாருடையது தெரியு...
மருந்து வணிகா்கள் ரத்ததானம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், மருந்து வணிகா்கள் வெள்ளிக்கிழமை ரத்ததானம் செய்தனா்.
அகில இந்திய மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் ஷிண்டேயின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் 75 ஆயிரம் வணிகா்கள் ரத்ததானம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒவ்வோா் மாநிலத்திலும் கின்னஸ் சாதனையாக பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் மருந்து வணிகா்கள் ரத்ததானம் செய்தனா்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ரத்ததானம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கத்தின் மாநில பொருளாளரும், மாவட்டச் செயலாளருமான அன்பழகன் தலைமையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள மருந்து வணிகா்கள், பணியாளா்கள், தன்னாா்வலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட மருந்து வணிகா் சங்கத்தினா் செய்திருந்தனா்.
என்கே-24-பிளட்
ரத்ததான முகாமில் பங்கேற்ற மருந்து வணிகா்கள் சங்கத்தினா்.