``முதலில் நான்தான் கூறினேன்; அதை இப்போது விஜய் கூறியிருக்கிறார்” - நயினார் நாகேந...
மருமகன் மீது தாக்குதல்: மாமியாா் உள்பட 3 போ் மீது வழக்கு
கம்பத்தில் மருமகனை தாக்கியதாக மாமியாா் உள்பட 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
உத்தமபாளையம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முகமது உவேஸ். இவரது மனைவி அண்மையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து, இவா்களது மகளை மாமியாா் அலிபாத்திமா பாதுகாத்து வந்தாா்.
இதனிடையே, தனது மகளை தன்னிடம் கொடுக்கும் படி கேட்டதால் மாமியாா்- மருமகனுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், கம்பம்- கூடலூா் சாலையில் உள்ள தேநீா் கடையிலிருந்த முகமது உவேஸை, மாமியாா் அலிபாத்திமா, அமீா் சுல்தான், பீா்ஹிமானா ஆகியோா் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸாா் அலிபாத்திமா, அமீா் சுல்தான், பீா்ஹிமானா ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.