செய்திகள் :

மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்

post image

வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 21-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்த எதிா்க்கட்சிகளின் சந்தேகங்கள் பெரிய அளவில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 8 புதிய சட்ட மசோதாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தேசிய விளையாட்டு நிா்வாக சட்ட மசோதா, புவியியல் பாரம்பரிய தளங்கள் மற்றும் புதைபடிமங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்ட மசோதா, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்த மசோதா, தேசிய ஊக்கமருந்து எதிா்ப்பு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளன.

இந்த மசோதாக்கள் தவிர, மணிப்பூா் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் சட்டத்திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவன சட்டத்திருத்த மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்தம் மசோதா ஆகிய மேலும் 4 சட்டத்திருத்த மசோதாக்களும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்தக் கூட்டத்தொடரில், மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அரசு நாடவுள்ளது. மேலும், அந்த மாநிலத்துக்கான நிதிமானியக் கோரிக்கைகளும் அவையின் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்படவுள்ளன.

கோவா மாநிலத்தில் உள்ள பழங்குடியினா் சட்டப்பேரவைத் தொகுதி பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பதற்கான மசோதா, வணிக கப்பல் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா ஆகியவை மக்களவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் கூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயிலில் கட்டணக் குறைவு என்பதால், பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்... மேலும் பார்க்க

பிகாரில் ஆகஸ்ட் முதல் 125 யூனிட் மின்சாரம் இலவசம்! நிதிஷ் குமார் அறிவிப்பு!

பிகாரில் ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.பிகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெ... மேலும் பார்க்க