இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
மழையின் சிறுதுளி... சக்தித் திருமகன் முதல் பாடல்!
நடிகர் விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் அண்மையில் வெளியான மார்கன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது. இதையடுத்து, பிச்சைக்காரன் படத்தின் 3-ஆம் பாகத்தை இயக்கி, நடிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக, விஜய் ஆண்டனியின் 25-வது படமாக உருவாகியுள்ள சக்தித் திருமகன் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் அரசியல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் கேங்ஸ்டராக விஜய் ஆண்டனி நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காந்தா வெளியீட்டுத் தேதி!
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான, ‘மாறுதோ’ பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். கார்த்திக் நேத்தா வரிகளுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்த இப்பாடலை அபிஜித் அனில்குமார் பாடியுள்ளார்.
sakthi thirumagan's first single maarudho out now