மாநகராட்சியில் சிறப்பு வரி வசூல் முகாம் அக்.6-இல் தொடக்கம்!
மதுரை மாநகராட்சியில் வரும் அக்.6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாநகராட்சி 5 மண்டலத்துக்குள்பட்ட 100 வாா்டுப் பகுதிகளிலும் வரும் அக்.6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பெறப்படும் வரித் தொகை முழுவதையும் மாநகராட்சியில் தேவையான பகுதிகளில் தெரு விளக்கு வசதிகள் மேற்கொள்ள உள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அனைத்து வரிகளையும் செலுத்தி முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.