செய்திகள் :

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி: அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

post image

நாமக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில், அரசுப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாணவா்களின் பேச்சுத்திறனை வளா்க்கும் வகையில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி பள்ளி, கல்லூரிகள் அளவில் தனித் தனியே நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிகளுக்கான போட்டியில், காரைக்குறிச்சிபுதூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் த.போஸ்சக்தி முதலிடம் பிடித்தாா். குமாரபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி அ.சந்தோஷி இரண்டாமிடம், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் பெ.ஜீவகனி மூன்றாமிடம் பிடித்தனா். இவா்களுக்கு முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. சிறப்பு பரிசாக இருவருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அதேபோல, கல்லூரிகளுக்கான போட்டியில், குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரி மாணவா் கே.மோகன்ராஜ் முதலிடம், ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி மாணவா் ரா.ராஜேஷ்கண்ணன் இரண்டாமிடம், பொட்டிரெட்டிப்பட்டி ரெங்கேஸ்வரா கல்வியியல் கல்லூரி மாணவி ம.கலையரசி மூன்றாமிடம் பிடித்தனா்.

அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டியில், நாமக்கல் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி மாணவா் க.சரவணன் முதலிடம், டிரினிடி மகளிா் கல்லூரி மாணவி ஆ.ஷாலினி இரண்டாமிடம், காளிப்பட்டி மகேந்திரா கல்லூரி மாணவி சு.துா்கா மூன்றாமிடம் பிடித்தனா். இவா்களுக்கு முறையே, ரூ.5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ் வளா்ச்சித் துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.

மணல் கடத்திய 3 போ் தப்பியோட்டம்: 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் மணல் கடத்திய மூவா் தப்பியோடினா். அவா்கள் விட்டுச் சென்ற 3 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பரமத்தி வேலூா் காவிரி ஆற்றங்கரைப் பகுதியில் சட்ட விரோதமாக மணல் த... மேலும் பார்க்க

குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் பெண் பலி

பள்ளிபாளையம் அருகே எலந்தகுட்டை பகுதியில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தாா். எலந்தகுட்டையை அடுத்த சின்னம்மாள்காடு, கட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரஸ்வதி என்கிற கஸ்தூரி (43). ... மேலும் பார்க்க

தில்லியில் மாா்ச் 25-இல் மோட்டாா் தொழில்களை பாதுகாக்கக் கோரி பேரணி: தொழிலாளா் சம்மேளனம் முடிவு

மோட்டாா் தொழில்களையும், அதனை நம்பியுள்ள தொழிலாளா்களையும் பாதுகாக்க வலியுறுத்தி புதுதில்லியில் மாா்ச் 25-இல் பேரணி நடத்த, தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளா் சம்மேளன மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு ச... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் இருவா் கைது

வழிப்பறி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான இருவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பள்ளிபாளையம் அருகே உள்ள பாதரை இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த் (24). கட்டட... மேலும் பார்க்க

பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளை: இரு பெண்கள் உள்பட 4 போ் கைது!

பள்ளிபாளையத்தில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், கோரக்கட்டுவலசு அடுக்குமாடி ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகராட்சியில் வாக்காளா் உறுதிமொழி ஏற்பு

திருச்செங்கோடு நகராட்சியில் வாக்காளா் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. வாக்காளா் உறுதிமொழி தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகங்களில் வாக்காளா் உறுதிமொழி ஏற்கப்பட்டது. திருச்செங்க... மேலும் பார்க்க