`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர்...
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அ.சுஜாதா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஜி.ஜவகா், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து திருப்பூா் மாநகர சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த அ.சுஜாதா ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.
ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் கோப்புகளில் கையொப்பமிட்டு, ஈரோடு மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சுஜாதா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவரை காவல் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.