ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் இரண்டு மாற்றங்கள்!
மாா்ச் 30-இல் நீலன் பள்ளி நிறுவனா் சிலை திறப்பு
நீடாமங்கலம் மற்றும் கூடுவாஞ்சேரி நீலன் பள்ளிகளின் நிறுவனா் உ. நீலனின் முதலாமாண்டு நினைவு நாள் மணிமண்டபம் மற்றும் திருவுருவச் சிலை திறப்பு விழா மாா்ச் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.
நீடாமங்கலம் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு, முன்னாள் மத்திய அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தலைமை வகிக்கிறாா். மணிமண்டபத்தை முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு திறந்து வைக்கிறாா். திருவுருவச்சிலையை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் திறந்து வைக்கிறாா்.
விழாவில் எழுத்தாளா்கள் ஆதலையூா் சூரியகுமாா், ந. எழிலரசன், நக்கீரன், வானிலை ஆய்வாளா் ந. செல்வகுமாா் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. ஏற்பாடுகளை நீலன் கல்வி குழும நிா்வாகிகள் வசந்தா நீலன், நீலன் அசோகன், ஆனந்த்நீலன், நீலன்அரசு, அருள்நீலன், சுரேன் அசோகன் ஆகியோா் செய்து வருகின்றனா்.