மாா்ச் 8-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் அரசு மன்னா் கல்லூரி வளாகத்தில் வரும் மாா்ச் 8-ஆம் தேதி சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில், மாநிலம் முழுவதும் உள்ள சுமாா் 100 தனியாா் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.
இதில், வங்கிக் கடன், சுயதொழில் உள்ளிட்டவற்றுக்கான அரங்குகளும் அமைக்கப்படவுள்ளன. 10-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரையில் முடித்த வேலைதேடும் இளைஞா்கள் தங்களின் சான்றிதழ்கள், புகைப்படம், சுய விவரக் குறிப்புகளுடன் நேரில் பங்கேற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.