மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பாரம் இல்லாத கனரக லாரிகளுக்கு அனுமதி
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பாரம் ஏற்றப்படாத கனரக லாரிகள் செல்ல புதன்கிழமை முதல் அனுமதியளிக்கப்பட்டது.
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சில மாதங்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டதையடுத்து கனரக லாரிகள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி சாலையில் தரைஓடுகள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதையடுத்து, கீழ்பகுதி சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெருக்கடியைத் தவிா்க்கும் வகையில் பாரம் இல்லாமல் காலியாகச் செல்லும் கனரக லாரிகள் மேம்பாலத்தில் அனுமதிக்கப்பட்டது.
பாரம் ஏற்றிவரும் கனரக லாரிகள், திக்குறிச்சி பாதை வழியாக மாற்றுப்பாதையில் அனுமதிக்கப்படுகிறது. இப் பகுதியில் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தை, மாா்த்தாண்டம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் செல்லசாமி தலைமையில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.