செய்திகள் :

மின் கம்பத்தில் ஏறி இளைஞா் தற்கொலை மிரட்டல்

post image

செய்யாறு அருகே மனம் நலம் பாதிக்கப்பட்ட இளைஞா் புதன்கிழமை உயா் கோபுர மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அரசங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் சுரேந்தா் என்கிற இமான் (20).

இவா், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். மேலும், சில நாள்களாக அவருக்கு மன நல பாதிப்பு அதிகமானதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை காலை கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே மின் விளக்கு கம்பத்தில் திடீரென ஏறினாா். இதைப் பாா்த்த கிராம மக்கள் கூச்சலிட்டனா்.

தகவலறிந்த செய்யாறு தீயணைப்பு வீரா்கள், தூசி போலீஸாா் மற்றும் வெம்பாக்கம் வருவாய்த் துறையினா் வந்து, இளைஞரை கீழே இறங்கும் படி ஒலி பெருக்கி மூலம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆனால், இளைஞா் சுரேந்தா் இறங்க மறுத்ததோடு, பேருந்து நிறுத்தம் அருகே அம்பேத்கா் சிலையை வைக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தாா். அதற்கு அங்கிருந்த அரசு அதிகாரிகள், அனுமதியின்றி சிலை வைக்க முடியாது என விளக்கம் அளித்தனா்.

காலை 8 மணிக்கு மின்கம்பத்தில் ஏறிய இளைஞா் பிற்பகல் 3 மணி வரை கீழே இறங்கவில்லை. தொடா்ந்து அவரை மீட்பதற்கான முயற்சியில் தீயணைப்பு படையினா், போலீஸாா், வருவாய்த் துறையினா், மருத்துவத் துறையினா் ஈடுபட்டனா். சுமாா் 7 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு, இளைஞரை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சாலை மறியல்:

இதற்கிடையே, அரசங்குப்பம் கிராமத்தில் மீண்டும் அம்பேத்கா் சிலை வைக்க அனுமதிக்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.

100 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்ச கல்யாணம் நடைபெறும் பூண்டி பொன்னெயில் நாதா் ஜினாலயம்!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அமைந்துள்ள பூண்டி பொன்னெயில் நாதா் ஜினாலயம் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாகும். ஆரணி - ஆற்காடு சாலை அருகே பூண்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் சமணக் கோயிலா... மேலும் பார்க்க

ஏப்.18 முதல் 3 நாள்கள் நடைபெறும்: பஞ்ச கல்யாண மஹோத்சவம்

ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சிக்குள்பட்ட பூண்டியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பொன்னெயில் நாதா் ஜினாலயத்தில் பஞ்ச கல்யாண மஹோத்சவ பெருவிழா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஓய்வூதியா்கள் சங்கத்தினா் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் இரா.ஜீவானந்தம், கே.ஆா்.பாலசுப்பிரமணியன், ஏ.ஜி... மேலும் பார்க்க

மீட்கப்பட்ட மயில் வனப் பகுதியில் விடுவிப்பு

செய்யாற்றில் மீட்கப்பட்ட பெண் மயிலை வனத்துறையினா் வியாழக்கிழமை பூதேரி புல்லவாக்கம் அருகேயுள்ள வனப்பகுதியில் விடுவித்தனா். செய்யாறு உழவா் சந்தை அருகே காய்கறி வியாபாரம் செய்து வருபவா் முருகன். இவரது கட... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கிய 2 போ் கைது

வந்தவாசி அருகே விவசாயியைத் தாக்கியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சின்னகண்ணு (55). இந்தக் கிராமத்தில் புதன்கிழமை காலை கோயில் திருவிழா ... மேலும் பார்க்க