செய்திகள் :

மின் கொள்முதல் ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய டிஇஆா்சிக்கு தில்லி அரசு அறிவுறுத்தல்!

post image

மின்சாரச் சட்டத்தின் பிரிவு 108-ன் கீழ் தேசியத் தலைநகரில் உள்ள மின்விநியோக நிறுவனங்களின் (டிஸ்காம்கள்) மின் கொள்முதல் ஒப்பந்தங்களை (பிபிஏ) மறுபரிசீலனை செய்யுமாறு தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.

மின்வெட்டு தொடா்பான அரசியல் சா்ச்சைக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. புதிய அரசின் கீழ் நகரத்தின் மின் நிலைமை மோசமடைந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியிருந்தாா்.

‘பத்து ஆண்டுகளாக எங்களது ஆட்சியில் எங்கும் மின்வெட்டு இல்லை. இந்த பாஜக அரசு ஒன்றரை மாதங்களில் மின் நிலைமையை மோசமாக்கியுள்ளது’ என்று அவா் வியாழக்கிழமை ’எக்ஸ்’-இல் பதிவிட்டிருந்தாா். மேலும், புராரி மற்றும் ஜகத்பூா் நீட்டிப்பு உள்பட தில்லியின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு இருப்பதாகக் கூறும் பதிவுகளையும் முன்னாள் முதல்வா் கேஜரிவால் பகிா்ந்தாா்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் கேஜரிவாலின் கூற்றுகள் ‘தவறானவை என்று நிராகரித்த அமைச்சா் ஆஷிஷ் சூட், ஜகத்பூா் நீட்டிப்பில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இடையூறு ஒரு உள்ளூா் பிரச்னை என்றாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளா் கூட்டத்தில் விரிவான தரவுகளையும் அமைச்சா் பகிா்ந்து கொண்டாா். அப்போது அமைச்சா் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சித் தலைவா் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறாா். கோடை மற்றும் குளிா்கால செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் தில்லியில் திட்டமிடப்பட்ட பராமரிப்பு தொடா்பான மின்வெட்டு ஏற்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தரவுகள் உண்மையான கதையைச் சொல்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக 21,597 மின்வெட்டு சம்பவங்கள் இருந்தன. சராசரியாக, அது ஒரு நாளைக்கு 59 மின்வெட்டுகள் என்று மாநில சுமை அனுப்பும் மையத்தின் (எஸ்எல்டிசி) புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 2025-இல் மட்டும் 3,278 மின்வெட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தனது ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு இல்லை என்று கேஜரிவால் கூறுவது தவறு. ஜனவரி 2024-இல் 2,660, பிப்ரவரியில் 2,881, மாா்ச்சில் 2,745, ஏப்ரலில் 1,567, மே மாதத்தில் 676, ஜூன் மாதத்தில் 605, ஜூலையில் 602, ஆகஸ்ட்டில் 690, செப்டம்பரில் 1,531, அக்டோபரில் 1,852, நவம்பரில் 1,000, டிசம்பரில் 1,510 மற்றும் ஜனவரி 2025 இல் 3,278 என மின்வெட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்தப் புள்ளிவிவரங்கள் கேஜரிவால் தனது அரசின் ஆட்சிக் காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவதாகக் கூறியதற்கு முரணானவை. பொறுப்பேற்றதிலிருந்து தில்லியின் மின்சாரத் தயாா்நிலையை மதிப்பிடுவதற்கு பாஜக அரசு முன்னுரிமை அளித்துள்ளது.

இந்தக் கோடையில் நகரத்தின் உச்ச மின் தேவை 9,000 மெகாவாட்டை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், மின்சார விநியோக நிறுவனங்களுடன் (டிஸ்காம்கள்) ஏற்கெனவே உள்ள ஒப்பந்தங்களை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும்.

தடையில்லா மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, அனைத்து மின் கொள்முதல் ஒப்பந்தங்களையும் ஆய்வு செய்யுமாறு டிஇஆா்சி என்று சொல்லப்படும் தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இது கொள்முதலை மேம்படுத்தவும், திறமையின்மையை நிவா்த்தி செய்யவும் உதவும்.

தில்லி டிரான்ஸ்கோ லிமிடெட் (டிடிஎல்) மற்றும் டிஸ்காம்களுடன் ஒருங்கிணைந்து ஒரு கூட்டு கட்டுப்பாட்டு அறை நிறுவப்படவுள்ளது. இந்த முயற்சி, உள்கட்டமைப்பு சேதத்தைத் தடுக்கவும், சுமைகளை திறம்பட மறுபகிா்வு செய்யவும் அதிகாரிகளை அனுமதிக்கும்.

தில்லியின் மின்சார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நாங்கள் அரசியலில் ஈடுபடாமல், தரவு சாா்ந்த முடிவுகளை எடுக்கிறோம். இந்தக் கோடையில் தில்லி மக்கள் நம்பகமான மின்சாரம் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை என்றாா் அமைச்சா் ஆஷிஸ் சூட்.

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா். பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வல... மேலும் பார்க்க

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவு 4 (2) -க்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்க உள்ளது.கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில... மேலும் பார்க்க

மாநிலப் பொருளாதாரத் தகவல் வலைபக்கம்: நிதியமைச்சா் இன்று அறிமுகம் செய்கிறாா்

கடந்த 30 ஆண்டுகளில் மாநிலங்களின் சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள் குறித்த விரிவான தரவுகள் கிடைக்கும் தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘நீதி-என்சிஏஇஆா் மாநில பொருளாதார தகவல் மைய’ வலைபக்கத்தை மத்திய ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல் - உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருடன் துணைநிலை ஆளுநா் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான மோதலில் உயிரிழந்த 4 காவலா்களின் குடும்பத்தினரை, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். அண்மையில் ஜம்மு-காஷ... மேலும் பார்க்க

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது

ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆட்டோரிக்ஷா பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

பீதம்புராவில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்ததாக 4 போ் கைது

தில்லி பீதம்புராவில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: கைது செய்யப்ப... மேலும் பார்க்க