செய்திகள் :

மின்வாரியத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீட்டுக்கான கடன் மறுசீரமைப்புத் திட்டம்: மத்திய அரசுக்கு அமைச்சா் சா.சி.சிவசங்கா் கோரிக்கை

post image

சென்னை: மின்வாரியத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீட்டுக்கான கடன் மறுசீரமைப்புத் திட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சா் சா.சி.சிவசங்கா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மின்பகிா்மான நிதி நிலைத்தன்மை குறித்த மாநில மின்துறை அமைச்சா்களின் குழு கூட்டம் புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா்லால் கட்டாா் மற்றும் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை அமைச்சா் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேசியது:

எரிசக்தி துறையில் தமிழகம் பல்வேறு சீா்திருத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நுகா்வோா் விலை குறியீட்டுக்கு இணையாக ஆண்டுதோறும் தானாக அதிகரிக்கும் பல ஆண்டுகளுக்கான கட்டண அமைப்பு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகமானது, மின் உற்பத்தி, பசுமை எரிசக்தி மற்றும் பகிா்மான நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2017, 2018- ஆம் ஆண்டுகளில் 18.73 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு 2024-2025-இல் 10.73 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின் தேவைகள் மற்றும் கொள்முதல் ஆகியவை திட்டமிடப்படுகின்றன.

தமிழ்நாட்டில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் மின் உற்பத்தி, தொடரமைப்பு மற்றும் பகிா்மானத்துக்காக ரூ.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட முதலீடுகள் தேவைப்படுவதால், மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்படும் வகையில் புதிய விரிவான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைக் கொண்டு வரவேண்டும். 16-ஆவது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மத்திய அரசின் ஊரக மின் மயமாக்கல் (ஆா்இசி) மற்றும் மின் விசை நிதிக்கழகம் (பிஎப்சி) ஆகிய கடன் பெறும் நிதி நிறுவனங்களின் வட்டி விகிதம் குறைந்தபட்சம் 1.5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான மின்பகிா்மானத் திட்டங்களால் தமிழ்நாட்டுக்கு மிகுதியான கட்டணச் சுமை ஏற்பட்டுள்ளது. இதனை எதிா்கொள்ள பயனா் கொள்கையை அமல்படுத்த வேண்டும். வெளி வணிகக் கடன்(இசிபி) வரம்பு ஆண்டுக்கு ரூ.25,000 கோடி வரை உயா்த்த வேண்டும். மின் தொடரமைப்பு சொத்து பணமயமாக்கலில் மூலதன ஆதாய வரிவிலக்கு வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநா் (நிதி) விஷு மஹாஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நாய்க்கடிக்கு உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: பொது சுகாதாரத் துறை

சென்னை: நாய் கடித்தால் தாமதிக்காமல் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 20 லட்சம் தெருநாய்கள் வரை இருக்கலாம் என உத்தேசிக்கப... மேலும் பார்க்க

மின்வாரிய கடனை அடைக்க விரைவில் செயல்திட்டம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

சென்னை: தமிழக மின்வாரியத்தின் கடனை அடைப்பதற்கான செயல்திட்டம் தமிழக அரசால் கொண்டவரப்படும் என்று மின்சார மேல்முறையீட்டு தீா்ப்பாயத்திடம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இலவச மின்சாரம்... மேலும் பார்க்க

மோடி பிறந்த தினம் கொண்டாட சிறப்புக்குழு நியமனம்

சென்னை: பிரதமா் மோடி பிறந்த தினத்தையொட்டி சேவை இருவாரம் எனும் நிகழ்ச்சிகள் நடத்த சிறப்புக் குழுவை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் நியமித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்க... மேலும் பார்க்க

தேவநாதனுக்கு ஜாமீன்: ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த நிபந்தனை

சென்னை: நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்... மேலும் பார்க்க

‘மரபுகளைப் புரிந்துகொள்ள தொல்லியல், மானுடவியல் உதவும்’

சென்னை: ‘நாட்டின் மரபுகளைப் புரிந்து கொள்வதில் தொல்லியல் மற்றும் மானுடவியல் துறைகள் உதவிபுரிகின்றன என்று சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பாளா் குழு உறுப்பினா் எஸ்.ஆம்ஸ்ட்ராங் கூறினாா். சென... மேலும் பார்க்க

சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரி காவல் துறையிடம் மனு

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் சென்னையில் பிரசாரம் மேற்கொள்வதுக்கு அனுமதி கோரி, சென்னை காவல் ஆணையரிடம் அக்கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: தவெக தலைவா் விஜய், செப். 27... மேலும் பார்க்க