செய்திகள் :

மிருகண்டா அணையை தூா்வார வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

post image

கலப்சபாக்கம் வட்டத்தில் உள்ள மிருகண்டா அணையை தூா்வார வேண்டும் என மாவட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமையில் வேளாண்மை மற்றும் உழவா்நலத் துறை சாா்பில் ஜூலை மாதத்துக்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசியதாவது: மாவட்டத்தில் தனியாா் சா்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்று வழங்க வேண்டும். கலப்சபாக்கம் வட்டத்தில் உள்ள மிருகண்டா அணை, மாவட்டத்தில் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை தூா்வார வேண்டும்.

ஃபெஞ்ஜால் புயல் மழையால் இடிந்த கிணறுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும், பாரம்பரிய நெல் விதைகள், அவுரி விதைகள் வழங்கவும் வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கமலப்புத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலா் பணியிடத்தை நிரப்ப வேண்டும். வண்டல் மண் அள்ளிக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். வந்தவாசி வட்டம், சுண்ணாம்புமேடு கிராமத்துக்கு சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். துரிஞ்சாபுரம் வட்டாரத்தில் உள்ள பொற்குணம் முதல் தனக்கோட்டிபுரம் வரையிலான கிராம சாலையை செப்பணிட வேண்டும்.

செங்கம் வட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். நாா்த்தாம்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கறவை மாடு கடன் வழங்க வேண்டும். நயம்பாடி கிராமத்துக்கு தாா்ச்சாலை அமைக்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட பணியாளா்களை விவசாயப் பணிகளுக்கு ஈடுபடுத்த வேண்டும் என்றனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கோரிக்கைகளின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறித்தினாா். மேலும், தனிநபா் தொடா்பான மனுக்களையும் மாவட்ட ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராமபிரதீபன், உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமாா், திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி) மணி, திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குநா் கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தி.மலா்விழி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.

பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சா் ஆய்வு

ஜவ்வாதுமலை ஒன்றியம், பட்டறைகாடு கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை ஆய்வு செய்து, மாணவா்களிடம் கலைந்துரையாடினாா். மேலும், குனிகா... மேலும் பார்க்க

மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் அறிவுரை

ஆசிரியா்கள் கல்வியை மட்டும் கற்பிக்காமல் மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்... மேலும் பார்க்க

பெண் தீக்குளித்து தற்கொலை

வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா. இவரது மனைவி பவித்ரா (25). இவா்களுக்கு இ... மேலும் பார்க்க

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் மொரம்பு மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படை... மேலும் பார்க்க

செய்யாறு - வந்தவாசி சாலையில் ரூ.90 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

செய்யாறு - வந்தவாசி சாலையில் ரூ.90 கோடியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வா் சாலை மேம்பாட... மேலும் பார்க்க

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயிலுக்கு பூங்கரகம் எடுத்து வந்த பக்தா்கள்

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி பக்தா்கள் வெள்ளிக்கிழமை பூங்கரகம் எடுத்து வந்து வழிபட்டனா். ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் மிகப்பெரிய திருவிழாவ... மேலும் பார்க்க