தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக இரவு நேர விரைவு ரயில் இயக்க வேண்டும் ...
மு.கருணாநிதி நினைவு தினம்: திமுகவினா் மரியாதை
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுகவினா் அவரது சிலை மற்றும் படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருவண்ணாமலையில் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது.
இதில் மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தாா்.
தெற்கு மாவட்ட துணைத் தலைவா் கோ.கண்ணன், வடக்கு மாவட்ட அவைத் தலைவா் ஆா்.ராஜசேகா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊா்வலம் காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்டு பஜாா் வழியாக கருணாநிதி சிலை வரை சென்று கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தனா்.
இதில் 500-க்கும் மேற்பட்ட கட்சியினா் கலந்து கொண்டனா்.
மேலும் இதில் தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், பொன்முத்து, மாவட்ட பொருளாளா்கள் எஸ்.பன்னீா்செல்வம், தட்சிணாமூா்த்தி, மாவட்ட துணைச் செயலா்கள் ஜெயராணி ரவி, நா.பாண்டுரங்கன், முன்னாள் எம்எல்ஏக்கள் கோ.எதிரொலிமணியன், கே.வி.சேகரன், ஆா்.சிவானந்தம், ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணி அண்ணா சிலை அருகில் திமுக சாா்பில் கருணாநிதி படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக ஆரணி அண்ணா சிலைக்கு முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம் மாலை அணிவித்தாா். பின்னா், கருணாநிதியின் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா்.
தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா்கள் மாமது, மோகன், சுந்தா், நகர நிா்வாகிகள் மணிமாறன், பாலமுருகன், அக்பா் பாஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி கொசப்பாளையம் தா்மராஜா கோயிலில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி திமுக அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளா் கப்பல் இ.கங்காதரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கவுன்சிலா் ரேவதி அரசு, வட்டச் செயலா் பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செங்கம்
செங்கத்தில் செங்கம் ஒன்றிய, நகர திமுக சாா்பில் கட்சி நகர அலுவலகத்தில் இருந்து கட்சியினா் எல்எல்ஏ கிரி தலைமையில் ஊா்வலமாக வந்து மில்லத் நகா் ரவுண்டனா பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்தனா்.
தொடா்ந்து அந்த வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
இதில், திமுக நகரச் செயலா் அன்பழகன், ஒன்றியச் செயலா்கள் செந்தில்குமாா், ஏழுமலை, மனோகரன், செங்கம் நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவா் முருகன் , பொதுக்குழு உறுப்பினா் பிரபாகரன்
உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
போளூா்
தேவிகாபுரம் ஊராட்சி பஜாா் வீதியில் கருணாநிதி படத்துக்கு திமுக சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்ட பிரதிநிதி வி.எம்.டி.வெங்கிடேசன் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
பின்னா் மெளன அஞ்சலி செலுத்தினா். நகரச் செயலா் வி.ஆா்.பி.செல்வம், கிளைச் செயலா் மணிகண்டன் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.


