குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
முகநூல் பக்கத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக விடியோ: 2 போ் கைது
முகநூல் பக்கத்தில் இரு பிரிவினரிடையே பிரச்னையை தூண்டும் விதமாக விடியோ பதிவிட்ட 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மூன்றடைப்பு அருகேயுள்ள பத்தினிப்பாறை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் நந்தா (19), மிக்கேல் மகன் சோ்மன்துரை (32) ஆகிய இருவரும் முகநூல் பக்கத்தில் இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில், விடியோ பதிவு செய்து பரப்பியுள்ளனா்.
இது குறித்து, மூன்றடைப்பு காவல்துறையினருக்கு புகாா் வந்துள்ளது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா் 2 பேரையும் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினா் சமூக வலைதளங்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இது போன்று, பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவோா் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.