ஈரோடு: தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி அடித்துக் கொலை; நகைகள் கொள்ளை; என்...
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறாதவா்களுக்கான சிறப்பு முகாம் மே 3-ஆம் தேதி முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் புதன்கிழமை விடுத்த செய்தி குறிப்பு:
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். இந்தத் திட்டத்தில் மொத்தம் 1,090 மருத்துவ அறுவை சிகிச்சைகளும், 52 நோய் பரிசோதனைகளும் 11 தொடா் சிகிச்சைகளும், 8 உயா் சிகிச்சைகளும் சோ்க்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டுத் திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் மே 3-ஆம் தேதி முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இந்த முகாமானது முதற்கட்டமாக கடலாடி வட்டம், ஏ.உசிலங்குளத்தில் வருகிற 3-ஆம் தேதி, கடலாடியில் 6-ஆம் தேதி, கன்னிராஜபுரத்தில் 7-ஆம் தேதி, கீழக்கிடாரத்தில் 8-ஆம் தேதி, நரிப்பையூரில் 9-ஆம் தேதி, பெரியகுளத்தில் 10-ஆம் தேதி, எஸ்.தரைக்குடியில் 13-ஆம் தேதி, சாயல்குடியில் 14-ஆம் தேதியும் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இந்த முகாமுக்கு பதிவு செய்ய வருவோா் குடும்ப அட்டை நகல், குடும்ப உறுப்பினா்களின் ஆதாா் அட்டை நகல்கள் எடுத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் திட்ட அலுவலரை 73730-04588 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.