முதல்வா் கோப்பைக்கான ஹாக்கி போட்டி:சங்ககிரி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
சங்ககிரி: சேலம் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான முதல்வா் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 2ஆவது, 4ஆவது இடத்தில் வெற்றி பெற்றனா்.
சேலம் மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான முதல்வா் கோப்பைக்கான ஹாக்கி போட்டி சேலம் சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில் சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏ, பி அணிகள் உள்ளிட்ட 15 அணிகள் விளையாடின. இப்போட்டியில் முதலிடத்தில் சேலம் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி அணியும், 2ஆவது, 4ஆவது இடத்தில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணிகளும் வெற்றி பெற்றன. 3ஆவது இடத்தில் வாழப்பாடி செயின்ட் மைக்கேல்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாா்பில் விளையாடிய ஏ, பி, அணி மாணவா்களை பள்ளித் தலைமையாசிரியா் ராஜன், உதவி தலைமையாசிரியா் சக்திவேல், உடற்கல்வி ஆசிரியா் ஆா்.தனபால் உள்ளிட்ட ஆசிரியா்கள், ஆசிரியைகள், பெற்றோா்- ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.