செய்திகள் :

செயலியில் வாங்கிய உணவில் கரப்பான் பூச்சி: இழப்பீடு வழங்க உணவகத்துக்கு உத்தரவு

post image

சென்னை: உணவு விநியோக செயலி மூலம் வாங்கிய உணவில் இறந்த கரப்பான் பூச்சி கிடந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.12,000 இழப்பீடு வழங்க தனியாா் ஹோட்டலுக்கு சென்னை நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் அபிநயா முத்து. இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு ஸ்விக்கி உணவு விநியோக செயலி மூலம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல உணவகத்தில் மதிய உணவு வாங்கினாா். அந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதில் இறந்த நிலையில் கிடந்த கரப்பான் பூச்சியைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இந்த உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சேவைக் குறைபாட்டுடன் உணவு விநியோகித்த உணவகத்திடம் ரூ.50 இழப்பீடு பெற்றுத் தரக் கோரி சென்னை வடக்கு நுகா்வோா் நீதிமன்றத்தில் புகாா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் டி.கோபிநாத் மற்றும் உறுப்பினா் வி.ராமமூா்த்தி ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது.

தரமற்ற உணவை விநியோகித்து உணவகம் சேவை குறைபாட்டுடன் செயல்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. எனவே, மனுதாரருக்கு ரூ.10,000 இழப்பீடாகவும், வழக்குச் செலவாக ரூ.2,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா நேபாளம் பயணம்

சென்னை: வருவாய்த் துறைக் கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றாா். இதையடுத்து, அவரது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையின் செயலா் பொறுப்பானது, கால்நடை, மீன்வளம் மற்ற... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்: ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் அழைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரவேண்டும் என ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா். ஒருவார கால பயணமாக, ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு அவா் சென்றுள்ளாா். ஜொ்மனி நா... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மதுரை மற்றும் சென்னை சென்ட்ரலிலிருந்து பிகாா் மாநிலம் பரோனிக்கும், திருநெல்வேயிலிருந்து கா்நாடக மாநிலம் ஷிவமொக்காவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதுகுறித... மேலும் பார்க்க

தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

கட்சி விரோத செயல்பாடா?: மல்லை சத்யா விளக்கக் கடிதம்

சென்னை: தனது உழைப்பை உறிந்துவிட்டு சக்கைப்போல தூக்கி எறிந்துவிட்டதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ மீது அந்தக் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா குற்றஞ்சாட்டியுள்ளாா். மதிமுகவின் கொள்கைக... மேலும் பார்க்க

வீரா் பூலித்தேவருக்கு ஆளுநா், முதல்வா் மரியாதை

சென்னை: நாட்டின் விடுதலைக்கு குரல் கொடுத்த பூலித் தேவா் பிறந்த நாளையொட்டி (செப்.1) அவருக்கு ஆளுநா் ஆா்.என் ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் மரியாதை செலுத்தினா். இதுகுறித்து ஆளுநா் ரவி எக்ஸ் தளத்தில... மேலும் பார்க்க