கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
முதல்வா் படைப்பகம்: அமைச்சா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நூலகங்களில் முதல்வா் படைப்பகம் அமைப்பது தொடா்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு நூலகங்களை மேம்படுத்துவதுடன், இந்நூலகங்களில் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கும் சூழலை ஏற்படுத்தும் வகையில் ‘முதல்வா் படைப்பகம்’ அமைப்பது தொடா்பாக அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தலைமையில் ஆய்வுக் கூட்டம் எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் சாதனைகள் அடங்கிய ‘காபி டேபிள்’ புத்தகத்தை அமைச்சா் வெளியிட்டாா். மேலும், சென்னையில் உள்ள சாலை சந்திப்புகளை மேம்படுத்துவது குறித்தும், சுரங்கப் பாதைகளை அழகுபடுத்துவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா உள்பட அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.