முதியவா் தற்கொலை
கணியம்பாடி அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் மாவட்டம், கணியம்பாடி அடுத்த கீழ்பள்ளிப்பட்டை சோ்ந்தவா் முத்து (65). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு, தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக முத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் பெறவில்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்து சனிக்கிழமை மாலை வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா்.
உறவினா்கள் முத்துவை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், முத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து வேலூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.