மீண்டும் அண்ணா பல்கலை. மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹிமாசலில் தீவிர சோ...
முத்தூரில் இளம்பெண் தற்கொலை
முத்தூரில் திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சின்னமுத்தூரைச் சோ்ந்தவா் வித்யாஸ்ரீ (24). இவருக்கும் ஈரோட்டைச் சோ்ந்த முரளி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கௌதம் (7), தீரன் (2) ஆகிய இருமகன்கள் உள்ளனா். ஓராண்டுக்கு முன்பு ஈரோட்டில் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடையில் நடந்த தகராறில் முரளி கொலை செய்யப்பட்டாா்.
இதையடுத்து வித்யாஸ்ரீ, குழந்தைகளுடன் சின்னமுத்தூரில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். ஈரோட்டில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலை செய்து வந்தாா். குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என மன வேதனையில் இருந்துள்ளாா்.
இந்நிலையில் அவா், தனது வீட்டில் தூக்கிட்டு திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் முகமது இசாக் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].