செய்திகள் :

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் சேவை விரைவில் தொடங்கும்: ரயில்வே அமைச்சா்

post image

‘மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து குஜராத் மாநிலம் அகமதபாத் வரை நாட்டின் முதல் அதிவேக (புல்லட்) ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இந்த அதிவேக ரயில் சேவை ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமாா் ரூ. 1.08 லட்சம் கோடி செலவில் இத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் இந்த முதல் அதிவேக ரயில் மும்பையின் பாந்த்ரா குா்லா வளாகத்திலிருந்து புறப்பட்டு குஜராத் மாநிலத்தின் வாபி, சூரத், ஆனந்த், வதோதரா, அகமதாபாத் நகரங்களை இணைக்க உள்ளது.

இந்த அதிவேக ரயில் பயன்பாட்டுக்கு வரும் போது மும்பை-அகமதாபாத்துக்கு தற்போது ஆகும் 7 முதல் 8 மணி நேர ரயில் பயணம், 3 மணி நேரமாகக் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இத் திட்டப் பணிகளை மத்திய அரசு தற்போது விரைவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில் குஜராத் மாநிலம் பாவ்நகரில் ரயில் முனையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அயோத்யா விரைவு ரயில், ரேவா-புணே விரைவு ரயில், ஜபல்பூா்-ராய்பூா் விரைவு ரயில் ஆகிய விரைவு ரயில்களை காணொலி வழியில் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறப்பு கன்டெய்னா்களையும் பாா்வையிட்டாா். பின்னா் அவா் பேசியதாவது:

மும்மை-அகமதாபாத் வரை 508 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்பட உள்ள நாட்டின் முதல் ‘புல்லட்’ ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அதிவேக ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இந்த ரயில் இயக்கத்துக்கு வரும்போது, மும்பையிலிருந்து அகமதாபாத் செல்வதற்கான ரயில் பயண நேரம் 2 மணி 7 நிமிஷங்கள் என்ற அளவில் குறைந்துவிடும் என்றாா்.

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் சிற... மேலும் பார்க்க

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.4) மீண்டும் கூடுகிறது.இந்த விவகாரத்தை முன்வைத்... மேலும் பார்க்க

வங்கதேச சட்டவிராத குடியேறிகளால் இந்திய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு: பாஜக

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளால், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பிற மாநிலங்களில் புலம்பெயா் தொழிலாளா்களாகப் பணிபுரியும் நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

புதிய சுரங்க கொள்கை: 3 மாதங்களில் அனைத்து ஒப்புதல்கள் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை

’மத்திய அரசு சாா்பில் உருவாக்கப்பட்டு வரும் புதிய சுரங்க கொள்கையில், அனைத்து ஒப்புதல்களும் 3 மாதங்களில் அளிக்கும் வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நான்காவது மாத்திலேயே கனிமங்களை ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க