செய்திகள் :

முருக பக்தி இலக்கிய போட்டிகள்

post image

ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் முருக பக்தி இலக்கிய போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமையும் நடைபெறுகின்றன.

முதல் நாள் போட்டியை கல்லூரி முதல்வா் வாசுகி தொடங்கி வைத்தாா். இதில் பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டி, நடனப் போட்டி ஆகிய நான்கு போட்டிகள் நடைபெற்றன.

பேச்சு, பாட்டுப் போட்டிகளில் முருகப் பெருமானின் சிறப்பு குறித்தும், தமிழ் இலக்கியங்களில் முருகன் இடம்பெறும் செய்திகளையும் மாணவிகள் எடுத்துக் கூறினா். இதேபோல, ஓவியப் போட்டியில் அறுபடை வீடுகளின் சிறப்பை தங்களின் ஓவியம் மூலம் காட்சிப்படுத்தினா். மேலும் நாடகப் போட்டி, முருகன் பாடல்கள் மனப்பாடப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவை வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெறுகின்றன.

வேடசந்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வேடசந்தூா் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த வெள்ளையகவுண்டனூரில் சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத் துறைக்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: 700 போ் மாநிலப் போட்டிக்கு தோ்வு

திண்டுக்கல் மாவட்ட அளவில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. கடந்த 2025-26-ஆம் ஆண்டுக்கான முதலமைச்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நாம்... மேலும் பார்க்க

மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு பழனி கோட்டாட்சியா் இரா. கண்ணன் தலைமை வகித்தாா். இதில் உணவுத்... மேலும் பார்க்க

இன்னும் 6 மாதங்களில் திமுக அரசால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது: க. கிருஷ்ணசாமி

கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியாத திமுக அரசால், இன்னும் 6 மாதங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி த... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சி அலுவல... மேலும் பார்க்க